Fri. Apr 4th, 2025

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து நேரிட்டது.

இந்தவிபத்தில் சிக்கி 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.வெடி விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் இரங்கல் + நிதியுதவி

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ருபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ருபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்றும் முதல்மைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.