Sat. May 18th, 2024

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை கடந்த பல நாட்களாக தொடர்ந்து பெய்து வருவதால், அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சிதிலமடைந்த இடங்களில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் நாட்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வரும் 20 முதல் 22 ஆம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் மோடி, கேரள மாநில முதல்வர் பினராய் விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மீட்பு மற்றும் நிவாரண உதவிகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் இருந்து அம்மாநிலம் மீள்வதற்கு திமுக அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்….