Sun. Nov 24th, 2024

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த நிகழ்வு, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மத்திய பாஜக அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட பலர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பலியான விவசாயிகள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக டெல்லியில் இருந்து லக்னோ வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை, லக்கிம்பூர் செல்ல அனுமதிக்காமல், உ.பி. போலீசார் 48 மணிநேரத்திற்கு மேலாக தடுப்பு காவலில் வைத்தது, இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் பரவி, பரபரப்பு செய்தியானது.

அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தியும், லக்னோவிற்கு சென்றது, விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது, பின்னர் லக்கிம்பூர் செல்ல அனுமதித்தது போன்ற உ.பி. பாஜக அரசின் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளால் லக்கிம்பூர் நிகழ்வு நீறுபூத்த நெருப்பாகவே எரிந்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், லக்கிம்பூர் கொடூர நிகழ்வை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது உச்சநீதிமன்றம். நாளை இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலையிலும் கூட, லக்கிம்பூர் கொடூர நிகழ்வில், கொலை வழக்கில் குற்றம் சாட்டுப்பட்டுள்ள மத்திய அமைச்சரின் மகன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை கைது செய்யாமல், உ.பி. பாஜக அரசு கண்ணாமூச்சி காட்டி வருவது, நாடு முழுவதும் விவசாயிகளிடமும், சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊர்வலமாக செல்லும் விவசாயிகள் மீது ஈவு இரக்கமின்றி அடுத்தடுத்து இரண்டு கார்களை ஏற்றி அப்பாவி விவசாயிகளை பலி வாங்கிய கொலைகார பாவிகள்…

https://twitter.com/zoo_bear/status/1445785821622071299?s=20