சென்னை மாநகராட்சியின் மேயராக 1996 ஆம் ஆண்டில் பதவியேற்ற தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகரை சிங்கப்பூருக்கு இணையாக மேம்படுத்தும் வகையில் சிங்காரச் சென்னை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேயராக அவர் பதவி வகித்த காலத்தில் அதற்கான பணிகள் வேகமெடுத்தன. அதன் பிறகு அமைந்த திமுக ஆட்சியிலும், சென்னை மாநகரை பொலிவு மிகுந்த நகராக மாற்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டன.
பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிபடி, சென்னை மாநகரை மீண்டும் பொலிவு மிகுந்த நகரமாக மாற்ற, சிறப்பு திட்டங்களை அறிவித்தது. தற்போது, சென்னை மாநகரை சீரமைக்கும் பணிக்காக 500 கோடி ரூபாய் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகரை சிங்கார சென்னையாக மாற்றும் பணியில் மாநகராட்சியும், குடிநீர் வாரியமும் இணைந்து பணிகளை மேற்கொள்ளவுள்ளன.