Sun. Apr 20th, 2025

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட அனைத்துப் பட்டப்படிப்புகளிலும் 7.5 சதவீத சிறப்பு உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு உள்ஒதுக்கீட்டின்படி, சேர்க்கை நியமனக் கடிதங்களை இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மாணவர்களிடையே பேசிய முதல்வர், கல்வி மற்றும் விடுதிக்கட்டணங்களையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தார்.