Sat. May 18th, 2024

ஊரக உள்ளாட்சி தேர்தல் 06.10.2021 மற்றும் 09.10.2021 அன்று இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்..

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது..

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி,
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

6-10-2021……..

09-10-2021

என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்குகிறது..

9 மாவட்டங்களுக்கு தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளராக நியமிக்கப்படுவார்.

மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள் அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்படுவர்..

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நான்கு விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் .

9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது அக்டோபர் 16ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்தார்..