Sun. Apr 20th, 2025

மகாகவி பாரதியாரின் 100 வது நினைவு நாள் விழா இன்று ( செப்டம்பர் 11 ஆம்தேதி) தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதியார் திருவுருப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள பாரதியார் திருவுருச்சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அதன் பீடத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாரதியார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு மற்றும் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், அரசு உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பான 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு கவிஞர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் புதுச்சேரி,பாரதி பூங்காவில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். புதுச்சேரி முதல்வர் என்.ரெங்கசாமி மற்றும் அமைச்சர்களும் பாரதியாருக்கு மரியாதை செலுத்தினர்.