Breaking News
தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவைத் இடங்களுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது
அதிமுகவின் கேபி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.. அந்த 2 இடங்களுக்கும் வரும் 4 ஆம் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக எளிதில் வெற்றி பெற்று விடும்.. ஏற்கெனவே மறைந்த அதிமுக எம். பி முகமது ஜானின் இடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது..
இந்த ராஜ்யசபா தேர்தலில் திமுக. வுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் நடந்து கொண்டதாக அதிமுக சார்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது… காலியான 3 இடங்களுக்கும் ஒரே தேதியில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் அதிமுக. வுக்கு ஒரு இடம் கிடைத்திருக்கும்… இரண்டு இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெறும் சூழல் உருவாகியிருக்கும் என அதிமுக மூத்த தலைவர்கள் வருத்தமாக உள்ளது..