Fri. Nov 22nd, 2024

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் வரும் 20 ம் தேதி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின் நோக்கம் குறித்தும், கூட்டணியினர் கட்சியினர் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தள்ளார்.

தொடர் விலையேற்றம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பாஜக அரசின் மக்கள் – ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து வரும் 20 ஆம் தேதி திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சியினர் தங்கள் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என திமுக தலைவரும்,முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஒன்றாக வெளியிட்டுள்ள அறிக்கை: