Fri. Apr 11th, 2025

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யும், இலங்கை அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இன்று திமுக மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இலங்கை தொழிளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற இவர், இலங்கை அரசில் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் தோட்ட வீட்டமைப்பு, சமூக உட்கட்டமைப்பு ராசாங்க அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

அரசு முறைப்பயணமாக தமிழகம் வந்துள்ள இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று திமுக எம்.பி கனிமொழியை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் வாழ்வாதார மேம்பாடு, பொருளாதார முன்னேற்றம், அரசியல் உரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.

ஜீவன் தொண்டமானுடனான சந்திப்பு குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.