Fri. Apr 18th, 2025

நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக டாப்ஸ் நடிக்கும் அனபெல் சேதுபதி படம் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரபல இயக்குனர் சுந்தரராஜனின் மகன் தீபக் இயக்கி வரும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜெய்பூரில் படமாக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் நடிகை ராதிகா, நகைக்சுவை நடிகர் யோகிபாபு, பிரியதர்ஷினி உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் ஏராளமானோர் நடித்துள்ளனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் வகையில் அனபெல் சேதுபதி திரைப்படம் இருக்கும் என்று அடித்துச் சொல்லும் புதுமுக இயக்குனர் தீபக், ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் கலகலவென வைத்திருந்தார் விஜய் சேதுபதி என நெகிழ்ச்சியுடன் கூறி வருகிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபுவுக்கே டஃப் பைட் கொடுத்துள்ளார் டாப்ஸி.

திரைப்படத்தில் மன்னராகவும் வருகிறார் விஜய் சேதுபதி. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் வாழ்ந்த அரசரின் வேடம் அட்டகாசமாக பொருந்தியிருக்கிறதாம் விஜய்சேதுபதிக்கு. கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு, எடிட்டீங் பிரதீப், புதிய இசையமைப்பாளர் கிஷோர் என யூத்துகள் ஒட்டுமொத்தமாக கை கோர்த்துள்ள இந்த படம், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஒட்டுமொத்த கலைஞர்களுக்கும் மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் என்று நம்பிக்கையோடு பேசுகிறார் இயக்குனர் தீபக்.