Sat. Nov 23rd, 2024

திமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் முதல் அறிவிப்பு…

சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் ரூ.39 கோடி செலவில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில், 110 விதியின் கீழ் முதல் அறிவிப்பாக கலைஞர் நினைவிடம் அமைப்பது இடம் பெற்றுள்ளது.