சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக ராஜ்ய சபா எம்.பி.முகமது ஜான் மறைந்தார். அதனால், காலியாக உள்ள அந்த இடத்திற்கு வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளர் பெயர் இன்று காலை அறிவிக்கப்பட்டது.
திமுக தலைமைக் கழகத்தின் அறிவிப்பின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்லா, வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திமுக பொதுக்குழு உறுப்பினரும், வெளிநாடு வாழ் தமிழர் அணியின் இணை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார் எம்.எம்.அப்துல்லா.திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.எம்.அப்துல்லா, இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். இதேபோல இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வையும் சந்தித்து எம்.எம்.அப்துல்லா ஆசி பெற்றார்.