மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதையடுத்து திமுக.வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வரும் 26 ஆம் தேதி மதுரை சொக்கிகுளத்தில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 6 பேர் என மொத்தமாக 7 பேருக்கு இந்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது
ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 ஆம் வரை 7 நாட்கள் தனித்தனியாக விசாரனைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
2001 – 2006 காலகட்டத்தில் அதிமுக தலைமையிலான அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 90 இலட்சம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு
இவ்வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய அமலாக்கத்துறை சம்மனில் குறிப்பிட்டு உள்ளனர்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கெனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், 2 வதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் திமுக.வில் புயலை கிளப்பியுள்ளது. இரண்டு பேரும் அதிமுக.வில் இருந்து திமுக.விற்கு வந்தவர்கள் என்பதால், திமுக அரசு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திமுக தரப்பில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.