சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் தொகுப்பு……
சிங்காரச் சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்.
சென்னையில் பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்; சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.
10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதியேற்றுள்ளது.
புதிதாக பெருநகர வளர்ச்சி குழுமங்கள் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஓசூரில் ஏற்படுத்தப்படும்.
உயிரியல் அகழ்ந்தெடுப்பு முறையில் சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு மீட்டெடுக்கப்படும்.
கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகால் ஏற்படுத்த ₹87 கோடி செலவில் திட்டம்.
நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.
மருத்துவம் மற்றும் குடும்பத் நலத்துறைக்கு 18,933,20 கோடி ஒதுக்கீடு..
இலவச ஆம்புலன்ஸின் எண்ணிக்கை 1303 ஆக உயர்த்தப்படும்.
திருவள்ளூரில் மின்வாகனப் பூங்கா அமைக்கப்படும். நெய்வேலியில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.
15 தொழிற் பயிற்சி நிறுவனங்களில் ரூ.60 கோடியில் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கப்படும்.
தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ராணிப்பேட்டையில் தோல் பொருள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்.
சென்னை நந்தம்பாக்கத்தல் 165 கோடியில் நிதி நுட்ப நகரம் அமைக்கப்படும்.
விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு இடங்களில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.
திருவண்ணாமலை,நெல்ல, விழுப்புரம் நாமக்கல், தேனி, சிவகங்கை, விழுப்புரம், நாகை ஆகிய நகரங்களில் 4000 ஏக்கர் பரப்பளவில் புதிதாக சிப்காட் தொழிற் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும்.
கோவையில் ரூ.225 கோடியில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும்.
உயர்கல்வித்துறைக்கு ரூ.5, 052 கோடி நிதி ஒதுக்கீடு.
இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு 490.27 கோடி ஒதுக்கீடு.
அரியலூர், பெரம்பலூரில் ரூ. 10 கோடியில் புவியியல் புதைபடிவ பூங்கா அமைக்கப்படும்.
தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
பழனி கோயில் நிர்வாகம் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
இலவச பள்ளிச் சீருடைத் திட்டத்திற்கு 409.30 கோடி ஒதுக்கீடு.
மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
100 கோயில்களில் தேர், குளம் சீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.
ரூ.626 கோடி ரூபாய் மதிப்புடைய கோயில் நிலங்கள், சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
12, 955 கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த ரூ. 130 கோடியில் நிதி நிலை இருப்பு உருவாக்கப்படும்.
துணி நூல் துறைக்கு தனி இயக்குனரகம் அமைக்கப்படும்.
மகளிர் கல்வி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 762,33 கோடி ஒதுக்கீடு
பாசனத் திட்டங்களை நிறைவேற்ற 6607.17 கோடி ஒதுக்கீடு.
அங்கன்வாடி மையங்களின் தரம் உயர்த்த 48.48 கோடி ஒதுக்கீடு.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மதிய உணவுத் திட்டத்திற்கு 1,725.41 கோடி ஒதுக்கீடு.
பழங்குடியினர், ஆதி திராவிடர் மேம்பாட்டிற்காக ரூ.4,142.33 கோடி ஒதுக்கீடு.