Sun. Nov 24th, 2024

சிவகங்கை மாவட்டத்தில் அரசு ஒப்பந்தத்தை எடுக்க விடாமல் திமுக துணை செயலாளர் ரவுடி போல கர்ஜித்து, சக திமுக நிர்வாகியை கொடூரமாக தாக்கியுள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட கதறும் திமுக நிர்வாகியின் கதறல் பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகேவுள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளுக்கான டெண்டர் வழங்கும் பணி இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்க திமுக மாவட்ட துனை செயலார் சேங்கை மாறன் உள்ளிட்ட திமுக ஒப்பந்ததாரர்கள் பலர் பங்கேற்றனர்.

ஏலம் எடுப்பதற்கான நடைமுறைகள் துவங்கிய போது திடீரென திமுக மாவட்ட துனை செயலாளர் செங்கைமாறன் அனியினருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகியான கோவானூர் சோமன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிதுநேரத்தில் இருதரப்புக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு அருகில் இருந்த சேரை கொண்டு தாக்கி கொண்டதில் சோமன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சோமனின் ஆதரவாளர்கள் எதிர் தரப்பினரின் காரை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர். ஆளும்கட்சியினருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்தவுடன் நிகழ்விடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியனர்.

பலத்த காயமடைந்த சோமனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு ஒப்பந்தத்தை பெறும் விவகாரத்தில் ஆளும்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளே மோதிக் கொண்டதைப் பார்த்து, சிவங்கை மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சோமன், செங்கை மாறன், ரவுடி போல நடந்து கொண்டார். தன்னை மீறி யாரும் அரசு ஒப்பந்தம் எடுக்க கூடாது என்று அராஜகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தனது எச்சரிக்கையையும் மீறி ஒப்பந்தம் எடுத்தால் கொலை மிரட்டலும் விடுக்கிறார் என்று தலையில் இருந்து வழிந்த ரத்தத்தை துடைத்தப்படியே பதைபதைப்போடு கூறினார்.

சிவங்கை மாவட்ட துணைச்செயலாளர் செங்கை மாறன் மீது அடுக்கடுக்கான புகார்களை திமுக கட்சியினரே கூறி வருகிறார்கள். அவரது மனைவி ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் உள்ளதால், இருவரும் சேர்ந்து கொண்டு திமுகவில் உள்ள மற்ற நிர்வாகிகளை தலையெடுக்க விடாமல் அராஜகம் செய்து வருவதாக சிவகங்கை திமுக நிர்வாகிகள் மனம் வெறுத்து புலம்புகிறார்கள்.

திமுக.வுக்கு தொடர்ந்து அவப்பெயரை ஏற்படுத்தி வரும் துணைச் செயலாளர் செங்கை மாறன் மற்றும் அவரது மனைவி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவங்கை மாவட்ட திமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.