2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாகவும், 2022-23ஆம் நிதியாண்டில் 17.2 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்க விவரம்….
2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி கணிப்பில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
ஜூலை மாதத்தில் பல வளர்ச்சி காரணிகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நாணய கொள்கை கூட்டத்தின் உறுப்பினர்கள் 5:1 வாக்குகள் அடிப்படையில் ஒப்புதல்.
நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், எம்எஸ்எப் விகிதம் 4.25 சதவீதமாகவும், வங்கி விகிதம் 4.25 சதவீத வட்டி விகிதம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை மாற்றவில்லை.
இவ்வாறு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளளது.
நாணய கொள்கை கூட்டம் கடந்த புதன்கிழமை கூடியது. 6 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதம் உள்ளிட்ட வட்டி நிர்ணயம் தொடர்பாக 5 பேர் ஒரு குரலில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சக்திகாந்த் தாஸ் இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்தாண்டை ஒப்பிடும் போது நடப்பாண்டில் பொருளாதாரம் ஸ்திரதன்மையோடு இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.