சுகாதாரத்துறையில் பணி மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்று, 72 அலுவலர்கள் பணிமாறுதல் உத்தரவுக்காக காத்திருந்தனர். இதுதொடர்பாக நல்லரசு.வில் செய்தி வெளியிட்டிருந்தோம். தாமதமாக பணி மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் பணி மாறுதல் பெற்றுச் செல்லும் சுகாதாரப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
பணி மாறுதலுக்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக பணி மாறுதலுக்கு லஞ்சம் கொடுக்காமல், சுகாதாரத்துறை அலுவலர்கள் பணிமாறுதல் பெற்றுள்ளனர். அவர்களின் உள்ளங்களை குளிர வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவிப்பது பொருத்தமான அம்சம்தான்.
சுகாதாரத்துறையில் இதுவொரு சாதனைதான்…..
GO-886செல்வ விநாயகத்திற்கு எச்சரிக்கை
சுகாதாரத்துறையில் நடைபெற்று வரும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக நல்லரசு மீது புகார் கொடுக்க துடித்துள்ளார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வவிநாயகம்.
பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மீதான வழக்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திரும்ப பெற்று வரும் இந்த நேரத்தில், ஊடகத்தை மிரட்டும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார் செல்வவிநாயகம்.
அரசு அதிகாரி என்ற ஆணவத்தில், ஊடகத்தை மிரட்டும் காரியத்தில் ஈடுபட முனைப்பு காட்டினால், அவரின் கடந்த கால சிறை வாழ்க்கை, நல்லரசுவில் தொடராக வெளி வரும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே ஸ்டாலின் குற்றம்சாட்டி இந்த நிலையில் தற்போது முதல்வர் ஆன நிலையில் அவருக்கு மின்துறை கொடுத்து கௌரவம் செய்தது ஏன் என்பது தொடர்பாக பல திமுக அனுதாபிகள் வேதனைப் படுவது போல நானும் ஒருவனாக இருந்து உங்களிடமிருந்து ஒரு செய்தித் தொகுப்பினை எதிர்பார்க்கிறேன்.
திமுக அரசில் செந்தில் பாலாஜி பெயர் இடம் பெற்ற போதும் அவருக்கு மின்சாரத்துறை ஒதுக்கப்பட்ட நாளிலேயே முதன்முதலில் விமர்சனம் செய்தது நல்லரசுதான்…..