Sat. May 18th, 2024

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அரசு முதல் முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. அதற்காக வரும் 13 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் கூடுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடருக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, சட்டப்பேரவைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன் விவரம இதோ…

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதேபோல, வேளாண்மை துறைக்கும் தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

காகித வடிவிலான நிதிநிலை அறிக்கை புத்தகத்தை வெளியிடாமல், மின்னணு வடிவிலான இ.புத்தகம் வடிவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் என்ற சிறப்புடன், தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் குறித்த முக்கிய அறிவிப்புகள், ஆகஸ்ட் 13 ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு குறித்து திமுக.வின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..