Thu. May 9th, 2024
https://twitter.com/mkstalin/status/1421812592306130952?s=20

மீண்டும் ஊரடங்கிற்கான சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை வீடியோ.

கொரோனா தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வதைத்து வருகிறது.

அரசின் நடவடிக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்களின் சேவையால் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியுள்ளோம்.

ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருகிறது.

முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மக்கள் எச்சரிக்கை இன்றி இருப்பது வேதனையளிக்கிறது.

அதனால் அதிக கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட கூடாது என்றே கடைகளை திறக்க உத்தவிட்டுள்ளோம், ஆனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக்கூடாது.

மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்திட வேண்டாம் என்று கடுமையாகவே சொல்கிறேன்.

மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வல்லமையும், உட்கட்டமைப்பும் தமிழக அரசுக்கு உண்டு, அதனால் கொரோனாவை விலை கொடுத்து வாங்க வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள்.

மூன்றாவது அலை கடுமையாக இருக்கும் என வல்லுனர்கள் சொல்வதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு நாம் மிக அவசியமான தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினியை பயன்படுத்தி கொரோனாவிலிருந்து நம்மையும், நாட்டையும் காப்போம் என தெரிவித்திருக்கிறார்.