தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை உயரதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் செய்தித்துறை ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இரண்டு துறைகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.