தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே ஐ.ஜி.,யாக இருந்த சுமித் சரன் ஊர்க்காவல் படை ஐ.ஜி.,யாக நியமனம்.
பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த தினகரன், சிலைகடத்தல் தடுப்பிரிவு ஐ.ஜி.,யாக நியமனம்.
திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக இருந்த கயல்விழி, சென்னை காவல்துறை பயிற்சி பிரிவு டிஐஜியாக நியமனம்.
திருவாரூர் எஸ்.பி.,யாக இருந்த சீனிவாசன் திண்டுக்கல் எஸ்.பியாக நியமனம்.
சென்னை குற்றப்பிரிவு சிஐடி சிறப்பு பிரிவு எஸ்.பி.,யாக இருந்த விஜயகுமார் திருவாரூர் எஸ்.பி.,யாக நியமனம்.
திண்டுக்கல் எஸ்.பி.,யாக இருந்த ரவளிபிரியா தஞ்சாவூர் எஸ்.பி.,யாக நியமனம்.
தஞ்சாவூர் எஸ்.பி.,யாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக நியமனம்.
ராணிப்பேட்டை எஸ்.பி.,யாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா சென்னை சைபர் குற்றப்பிரிவு 2 எஸ்.பி.,யாக நியமனம்.
சென்னை சிறப்பு சிஐடி குற்றப்பிரிவு 2 எஸ்.பி.,யாக விக்ரமன் நியமனம் .
சென்னை சைபர் குற்றப்பிரிவு 3 எஸ்.பி.,யாக தேவராணி நியமனம்.
சென்னை பெருநகர துணை ஆணையராக அருண் பாலகோபாலன் நியமனம்.
சென்னை, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு துணை ஆணையராக ஷியாமளா தேவி நியமனம்.