அரசு பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்தி, தடங்களை மறுஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை ஆய்வு கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் வழங்கிய அறிவுரை குறித்த செய்தி அறிக்கை இதோ….

