இணையம் வழியாக கல்வி கற்றல் என்பது கொரோனோ தொற்றின் மூலம் கிராமங்கள் வரை இன்றைக்கு கட்டாயமாகிவிட்டது. அனைத்து குழந்தைகளும் இன்றைக்கு செல்போன்களை நாள் முழுவதும் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்ட இன்றைய நிலையில், இணையம் வழியான ஆபாசங்கள் மற்றும் தவறான வழிநடத்தல் போன்றவற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஐபிஎஸ் எளிய தமிழிலில் செயல்முறை விளக்கங்களுடன் பயனுள்ள வகையில் விளக்கியுள்ளார்.