பெருந்தலைவர் காமராஜரின் 119 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பெருந்தலைவர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் காமராஜரின் தியாகத்தை போற்றியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர்கள், சிறுபான்மையினர் நல வாரியத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.