Sat. Nov 23rd, 2024

சென்னை அருகே உள்ள பூந்தமல்லி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்ற விஜய் என்பவரை கைது செய்த நசரத்பேட்டை காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் எஸ்.ஹரிகிருஷ்ணன் (த.கா.26191) மற்றும் ஊர்க்காவல் படை காவலர் கே.அஸ்வின்குமார் (HG 5037) ஆகியோர் இரவு ரோந்து பணியிலிருந்தபோது (04.7.2021) அன்று அதிகாலை நசரத்பேட்டை சிக்னல் அருகில் 2 இருசக்கர வாகனங்களில் சென்ற 3 நபர்களை நிறுத்தியபோது, நிற்காமல் இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றனர்.

இவர்களில் விஜய் என்பவரை நசரத்பேட்டை காவல் நிலைய காவலர் வி.எம்.ஏகாம்பரம் (கா.51419) என்பவரின் உதவியுடன் மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில் இவர்கள் பூந்தமல்லி பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வந்தது தெரியவந்தது.

       மற்ற 2 நபர்கள் மாம்பாக்கம், Saint Gobain நிறுவனம் அருகில் திருடிச் சென்ற பல்சர் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அந்த இருசக்கர வாகனங்கள்  கைப்பற்றப்பட்டு, மேற்படி குற்ற எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


       இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற குற்றவாளியை கைது செய்த T16 நசரத்பேட்டை காவல் நிலைய  தலைமைக்காவலர் ஹரிகிருஷ்ணன், காவலர் ஏகாம்பரம், ஊர்க்காவல் படை காவலர் அஸ்வின்குமார் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., (06.7.2021 அன்று )நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.