Sun. Nov 24th, 2024

மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் உள்ள இடர்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சவுபே கடிதம் வாயிலாக பதிலளித்துள்ளார்.

ஆங்கிலத்தில் மத்திய அமைச்சர் எழுதிய கடிதத்தையும், அதன் தமிழாக்கத்தையும் சு.வெங்கடேசன் எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் :

மதுரை எய்மஸ் – அடுத்தகட்ட நகர்வு. விதி 377 – கீழ் மக்களவையில் நான் எழுப்பிய பிரச்சனைக்கு அமைச்சரின் விரிவான பதில். கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.