Mon. Nov 25th, 2024

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்..

அவர் கூறியது :

யோகாவின் முக்கியத்துவமும், ஆர்வமும் அதிகரித்துள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் யோகாவை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

கொரோனாவால் 2 ஆண்டுகளாக யோகா நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்படாமல் போனாலும் யோகா மீதான ஆர்வம் குறையவில்லை.

மனதை ஒருமுகப்படுத்துவதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது-

கொரோனாவுக்கு எதிராக உலகம் போராடி வரும் நிலையில் நம்பிக்கை ஒளிக்கீற்றாக யோகா ஆசனங்கள் உள்ளன.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்-என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார் பிரதமர் மோடி.