Sat. Nov 23rd, 2024

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இன்றைய ஆளும்கட்சியின் முதல்வரான மு.க.ஸ்டாலினும், ஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்தோடு, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்த் தேசிய இயக்கங்களின் சார்பாகவும் இந்த கோரிக்கை அழுத்தமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில், அந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் பேரறிவாளனுக்க ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், தனது டிவிட்டர் பக்கதில் கருத்தொன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர், மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

s=20https://twitter.com/ikamalhaasan/status/1403678998417219590?s=20