Sun. Nov 24th, 2024

புகழ் பெற்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று மாலை தொடங்கியது. செக் குடியரசை சேர்ந்த வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவாவும் ரஷ்ய வீராங்கனை அனஸ்தசியாவும் பலப்பரீட்சையில் ஈடுபட்டனர்.

இரண்டு வீராங்கனைகளும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடியதால், போட்டி விறுவிறுப்பாக அமைந்தது. முதல் சுற்றை 6 – 1 என்ற கணக்கில் எழுதியாக கைப்பற்றிய பார்போரா, இரண்டாவது சுற்றை 2 – 6 என்ற கண்கில் அனஸ்தசியாவிடம் பறி கொடுத்தார். மூன்றாவது சுற்றில் இருவரும் ஆக்ரோஷத்துடன் விளையாடினார்கள்.

அனஸ்தசியா கடுமையாக போராடியபோதும், 6 – 4 என்ற கணக்கில் மூன்றாவது சுற்றை கைப்பற்றி, சேம்பியன் பட்டத்தை கைப்பற்றினார், கிரெஜ்சிகோவா

ரஷ்ய வீராங்கனையை 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். ரஷ்ய வீராங்கனை அனஸ்தசியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கிரெஜ்சிகோவா பெறும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவே ஆகும்.