Fri. Apr 26th, 2024

பிரெஞ்ச் ஓபன்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றார் ஜோகோவிச். பிரெஞ்ச் ஓபன் தொடரில் அவர் வென்றுள்ள இரண்டாவது பட்டமாகும்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாஸை வீழ்த்தினார்.

முதல் இரண்டு செட்களை சிட்சிபாஸிடம் பறிகொடுத்தார் ஜோகோவிச்.

அடுத்த மூன்று செட்களை 6 – 3, 6 – 2, 6 – 4 என கைபற்றி ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்.

இது அவர் வென்றுள்ள 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். 

பிரெஞ்ச் ஓபன் தொடரில் அவர் வென்றுள்ள இரண்டாவது பட்டமாகும்.