Sun. Nov 24th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார், கல்லணை கால்வாயில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலின் பின்னர், திருவாரூரில் குறுவை சாகுபடி பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மேற்பார்வையிடுகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை 11.6.2021ல் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அங்கிருந்து காரில் கல்லணை கால்வாய்க்கு செல்கிறார்.

கல்லணை கால்வாயில் கடைமடை வரைக்கும் தண்ணீர் சென்றடைவதற்கு வசதியாக நவீனப்படுத்தும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உதவியுடன் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் இப்பணிகளை ஆய்வு செய்கிறார்.

இதன்பின்னர் இப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட இருக்கும் நிலையில் இருப்பதால், 65 கோடி நிதியில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் முதல்வர் ஆய்வு செய்கிறார்.

பின்னர் திருவாரூர் சென்று அங்கு பணிகளை முடித்துவிட்டு அங்கேயே ஓய்வெடுக்கும் முதல்வர், மறுநாள் 12ம் தேதி அன்று மேட்டூர் அணைசென்று தண்ணீரை திறந்து வைக்க இருக்கிறார்.

முதல்வர் வருகையையொட்டி, திருச்சி, திருவாரூர், சேலம் ஆகிய 3 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்தறை உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.