Wed. May 8th, 2024

உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் 53 பேர் பதவி நீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது..

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் அதிமுக ஆட்சியின்போது அரசு வழக்கறிஞர்களாக அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு அரசு வழக்கறிஞர்கள் பலர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, தலைமை அரசு வழக்கறிஞராக சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர்களின் ராஜினாமாவை ஏற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 108, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 30 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னை, மதுரையில் ராஜினாமா செய்யாத அரசு வழக்கறிஞர்களை பதவி நீக்கம் செய்து தமிழக அரசு மற்றொரு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 28 பேர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 25 பேர் என மொத்தம் 53 பேர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்