Wed. Apr 24th, 2024

கடந்த சில நாட்களாக கொரோனோ தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 30 ஆயிரத்திற்கு மேலாக நாள் ஒன்றுக்கு பாதிப்பு இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இன்றைக்கு 20,421 ஆக உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் 20 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது இதுவே முதல்முறையாகும். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 400க்கு மேல் என்று இருப்பது கவலையளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் 1,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மற்றும் அதற்கு முந்தைய தினங்களில் இரண்டாயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில், இன்றைக்கு அதற்கும் குறைவாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியிருப்பது, சென்னை மக்களை நிம்மதியடைய வைத்துள்ளது. இதேபோல் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தால், வெகு விரைவாக சென்னை மாவட்டத்தில் கொரோனோ தொற்று மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சென்னையை விட அதிகமாக கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு உள்ளது. 2,645 பேர் பாதிப்பாக உள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது.

இதேபோல், ஈரோடடில் 1,694 பேரும், சேலத்தில் 1,071 பேரும் திருப்பூரில் 1,068 பேரும் என தொற்று பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதர மாவட்டங்களில் ஆயிரத்திற்கு குறைவாகவும், தருமபுரி, திண்டுக்கல், கரூர், மதுரை உள்ளிட்ட பெரும்பான்மையான மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு 500 க்கும் குறைவாகவே உள்ளது.

மாவட்டம் வாரியாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம் இதோ….