வேலூர் VIT பல்கலை வளாகத்தில் உள்ள கல்பனா சாவ்லா விடுதியில் சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.. அதன் துவக்க விழா
நாளை (26.5.2021) நடைபெறுகிறது.
என்ன தான் ஊரெங்கும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைந்துக் கொண்டிருந்தாலும், வேலூரில் அமைக்கப்படும் விஐடி சித்த மருத்துவ சிகிச்சை மையம் என்பதற்கு தனி சிறப்பு தான். VIT என்ற பெயரிலேயே இந்த சிறப்பு அனைவருக்கும் விளங்கிவிடும்.
ஆம். அத்தனை வசதிகள் இந்த விஐடி பல்கலைக்கழகத்தில். சொல்லப்போனால் கிட்டத்தட்ட ஒரு தனியார் மருத்துவமனையை போலவே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுக்க முழுக்க இலவசமாக அரசால் செயல்படுத்தப்படும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் என்பது தான் மிகச் சிறப்பு.
விஐடி சிகிச்சை மையம் என்றதுமே நிறைய பேர் சார் எவ்வளவு காசு கொண்டு வரணும்? அப்படின்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். இது முழுவதும் இலவசமான ஒன்று, அத்தனை வசதிகளுடன் கூடியது. கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட லேசான மற்றும் மிதமான குறிகுணங்கள் உடைய வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த யாராக இருந்தாலும் இந்த சித்த மருத்துவ கரானா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று பயனடையலாம்.
பலரும் பயன்படும் வகையில், அத்தனை வசதிகளையும் செய்து கொடுக்கும் விஐடி பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், சிகிச்சை மையம் தொடர்பாக அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும் சித்தமருத்துவ ஆர்வலர், வேலூர் மாவட்ட ஆட்சியருக்கும் வேலூர் மாவட்ட மக்கள் நன்றிகள் தெரிவித்து வருகின்றனர்…
தகவல் உதவி:
-மரு. சோ. தில்லைவாணன், MD(s)