https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FArappor%2Fposts%2F2073864982752523&show_text=true&width=500…
துவரம் பருப்பு டெண்டரில் மட்டுமா செட்டிங். சர்க்கரை மற்றும் பாமாயில் டெண்டர்களிலும் செட்டிங் தான். கடந்த 5 வருடங்களாக சந்தை விலையை விட அதிக விலைக்கு தான் தமிழக ரேஷன் துறை பொருட்களை வாங்கி வருகிறது. இந்த செட்டிங் டெண்டர்கள் அனைத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ Christy நிறுவனத்திற்கு தான் கொடுக்கப்படுகின்றன. இந்த செட்டிங் அனைத்தும் முன்னாள் முதல்வருக்கும், முன்னாள் உணவுத்துறை அமைச்சருக்கும் தெரியாமலா நடந்தது?
இதை கண்காணிக்க தானே மக்கள் உங்களுக்கு அதிகாரம் கொடுத்து பதவியில் அமர்த்தினார்கள். ஆனால் நீங்கள் இப்படி செட்டிங் செய்ய அனுமதித்து தமிழக அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் நஷ்டம் ஏற்பட காரணமாக இருந்திருக்கிறீர்களே !செட்டிங் செய்த அதிகாரிகளை விட செட்டிங் செய்வதை வேடிக்கை பார்த்து அனுமதித்த முன்னாள் முதல்வரும், முன்னாள் அமைச்சரும் மிகப்பெரிய குற்றவாளிகள்.
இவர்கள் பொறுப்பில் இருக்கும் போது விடப்பட்ட அனைத்து டெண்டர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதில் முறைகேடுகள் நடந்திருந்தால் இவர்கள் மீது வழக்கு போட்டு விசாரணை செய்ய வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். அதிமுக ஆட்சியில் ரேஷன் துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து அறப்போர் வெளியிட்ட ஆதாரங்களை https://youtube.com/playlist… இங்கு காணலாம்.