கோயமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி மற்றும் மேலாண்மை அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1 கோடியை, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.
பிரபல நடிகர் அஜித், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
பூர்விகா மொபைல்ஸ் நிறுவன உரிமையாளர் யுவராஜ், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 இலட்சம் வழங்கினார்.’
திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் , கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.25 இலட்சத்தை, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை. சேப்பாக்கம் எம்.எல்.ஏ மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
திமுக சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.