Sun. Apr 20th, 2025

தமிழக அரசின் நிதியமைச்சராக பதவியேற்றுக் கொண்ட முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் இன்று பணியை தொடங்கினார். அமைச்சருக்கு தொழில்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், முந்தைய அதிமுக ஆட்சியின் நிதி செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் முழு விவரங்களை கேட்டுள்ளேன். அதனை முழுமையாக ஆய்வு செய்யப்படும். கடந்த 10 ஆண்டுகளில், குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை கடன் பெற்ற விவரங்கள், செலவிடப்பட்ட தொகை, நிலுவையில் உள்ள கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி என அனைத்து விவரங்களும் வெள்ளை அறிக்கையாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் வருவாய் 10 முதல் 10.5 சதவீதம் வரை இருந்த நிலையில், இன்றைக்கு 6.5 சதவீதமாக சரிந்ததற்கான காரணம் குறித்தும் விரிவான விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ள நிலையில், அதனை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குவதுடன், தமிழகத்தை தொழில்துறையில் முதல் இடத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும்.

இவ்வாறு தொழில்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.