செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான 20 கண்டெய்னர் ஆக்சிஜனை அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் பயன்பாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், அதனை கருத்தில் கொண்டு அடுத்த நான்கு நாட்களுக்குள் 20 ஆக்சிஜன் கண்டெய்னர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை குறித்து தேசிய ஆக்சிஜன் திட்ட0 த்திற்கு தகவல் தெரிவித்த போது, 840 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை என கேட்கப்பட்டிருந்தது. ஆனால், 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டும் அனுப்பி வைத்தது, துரதிர்ஷ்டவசமானது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரும் 2 வாரங்களில் கொரோனோ நோய்க்கு சிகிச்சை அளிக்க 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை என்றும், அடுத்த இரண்டு வாரங்களின் தேவையின் அளவு 840 மெட்ரிக் டன்னாகவும்அதிகரிக்க வாய்ப்புள்ளதை சுட்டிக் காட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜனை விரைந்து அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.


0