Sat. Nov 23rd, 2024

மே 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளைக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நாட்கள் விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும் என்றும் அதன்படி, மே மாதம் முதல் வாரத்தில் 3 மற்றும் 4 தேதிகளில் அவசர வழக்குகளை தாக்கல் செய்லாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் மே 5 மற்றும் 6 ம் தேதிகளில் விசாரிக்கப்படும். வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனுத்தாக்கலும் அதற்கடுத்த இருநாட்கள் (புதன் மற்றும் வியாழக் கிழமைகளில்) விசாரணையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழ்க்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம்…….

நீதிபதிகள் சுரேஷ்குமார், ஆதிகேசவலு, சுவாமி நாதன் மற்றும் மஞ்சுளா ஆகியோர் முதல் வாரம்

நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி, சந்திரசேகரன் மற்றும் கண்ணம்மாள் ஆகியோர் இரண்டாவது வாரம்

நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி, நிர்மல்குமார் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் மூன்றாவது வாரம்

நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சரவணன், சத்திகுமார் சுகுமார குரூப், தமிழ் செல்வி ஆகியோர் நான்காவது வாரம்

மதுரை கிளையில் அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம்……

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி, ஆனந்தி ஆகியோர் முதல் வாரம்

நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், கிருஷ்ணவள்ளி, நக்கீரன் இரண்டாவது வாரம்

நீதிபதிகள் கிருஷ்ணகுமார், ஆனந்த் வெங்கடேஷ், இளங்கோவன் ஆகியோர் மூன்றாவது வாரம்

நீதிபதிகள் வேலுமணி, தாரணி, முரளி சங்கர் ஆகியோர் நான்காவது வாரம்

அவசர வழக்குகளை விசாரிக்கவுள்ள நீதிபதிகளின் பட்டியலை சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ளார்.