Sun. Nov 24th, 2024

கொரோனோ 2 வது அலை தமிழகத்தில் வேகமெடுத்து வருகிறது..கடந்த வாரத்தில் 5 ஆயிரத்திற்கும இருந்த தொற்று பாதிப்பு ஒரு வாரத்தில் இருமடங்காக உயர்ந்து இருக்கிறது..

கடந்த ஆண்டை விட 2வது அலையாக பரவும் கொரோனோ தொற்றின் மரபணு முற்றிலும் மாறுபட்டு இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்..

இருப்பினும் கொரோனோ அச்சமின்றி இருப்பது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூலம் உறுதியாகிறது..

தமிழகத்தில் இன்று கொரோனோ பாதிக்கப்பட்டோர் 11,681 பேர் என சுகாதார துறை அறிவித்துள்ளது..சென்னையில் மட்டும் 3,750 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்..

குணமடைந்து 7071 பேர் வீடு திரும்பி உள்ளனர்..

சிகிச்சை பலனின்றி 53 பேர் உயிரிழந்து உள்ளனர்..

கொரோனோ தொற்று மேலும் பரவாமல் இருக்க தமிழக சுகாதார துறை பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது..