Sun. Nov 24th, 2024

சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் பானுரேகா. இவர் சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரியும் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் பிரபாகரன் பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு தனக்கு துரோகம் செய்ததாகவும், மேலும் தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

‘‘தனது புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் பானுரேகா, கமிஷனர் முதல் காவல்நிலையம் இன்ஸ்பெக்டர் வரை, தனக்கு ஆதரவாக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்.

சென்னை நகர காவல்துறை, தவறு செய்யும் பிரபாகரனுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்று கூறும் பானுரேகா, சில நாட்களுக்கு முன்பு, . தன்னை 2வது திருமணம் செய்து அடித்து
கொடுமைப் படுத்துவதாக எஸ்ஐ வசந்த ராஜா மீது சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா போலீசில் புகார் அளித்ததை சுட்டிக் காட்டுகிறார்.

அந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள், வசந்த ராஜாவை பணியிடை நீக்கம் செய்தனர் என்றும் ஆனால் தனது புகாரின் பேரில் எஸ்.ஐ. பிரபாகரனை அழைத்து ஒருமுறை கூட விசாரிக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார் பானுரேகா.

நடிகை என்றால் ஒரு நியாயம்? சாதாரண பெண்மணி என்றால் ஒரு நியாமா? இதுதான் சென்னை காவல்துறையின் லட்சணமா? என்று ஆவேசம் பொங்கும் வகையில் கேள்வி எழுப்புகிறார் பானுரேகா.