Mon. May 5th, 2025

தமிழகத்தில் இன்று 9344 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2884 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 9 லட்சத்து 80 ஆயிரத்து 728 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மொத்தமாக 2 லட்சத்து 80 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்து இன்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 253 பேராகவும், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 2 ஆயிரத்து 22 ஆகவும் உள்ளது.

இன்று மட்டும் சிகிச்சை பலனின்றி 39 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 71 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனோ பாதிப்பு கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் ஆயிரம் என்ற விகிதத்திலேயே அதிகரித்து வருகிறது. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவே இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, பொதுமக்களுக்கு மீண்டும் மீண்டும் சுகாதாரத்துறை எச்சரிக்கையாக கூறுவது, முகக் கவசம் அணியுங்கள், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுங்கள், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு அவசியம் ஏற்பட்டால் அன்றி யாரும் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.