காட்பாடி அருகே உள்ள லத்தேரி பேருந்து நிலையத்தில் இன்று காலை நேரிட்ட பட்டாஜ விபத்தில் கடை உரிமையாளர் மோகன் செட்டியார் உள்பட மூன்று பேர் தீயில் கருகி பலியாகினர்.
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் செட்டியார் என்பவர் பட்டாசு கடை வைத்திருந்தார். இன்று காலையில் திடீரென்று பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட அப்பகுதி மக்கள் அச்சப்பட்டனர்.
பட்டாசு கடையில் இருந்து பரவிய தீயால், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.