Sun. Nov 24th, 2024

கொரோனோ தொற்று பரவல் கடந்த பல நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில், அனைத்துச் துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், காவல்துறை தலைமை இயக்குனர் ஜெ.கே.திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், வருவாய் நிருவாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகாந்தனம், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவப பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.உமாநாத் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகள் கலந்துகொண்டர்.

இந்தக் கூட்டத்தில் ஆலோசித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்த நிலையில், தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது. அதன் முக்கிய விவரங்கள் இதோ….

தமிழகத்தில் கொரோனோ வைரஸ் வேகமாக பரவி அதை அடுத்து ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை

திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும்

இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி –

பேருந்துகளில் நின்றவாறு பயணிக்க தடை விதிக்கப்படுகிறது

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு E-Pass கட்டாயம்.

அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி.

ஏப்ரல் 10ஆம் தேதியில் இருந்து கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு.

ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு – சென்னை மாநகராட்சி.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 16,68,62 பேர் உயிரிழந்துள்ளனர் – மத்திய சுகாதாரத்துறை

கொரோனாவிலிருந்து மேலும் 59,258 பேர் குணமடைந்துள்ள நிலையில் 9,10,319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா.