Sat. Nov 23rd, 2024

தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நிருபர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்.

கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகையில் சென்னையில் 8.1% ஆகவும் ராணிப் பேட்டில் 7.39 % ஆகவும் உள்ளது.

இந்தியாவில் 5.29 என்ற அளவில் சோதனை செய்தவர்களுக்கு தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நல்ல முறையில் நடத்த, சுகாதார துறைக்கு தேர்தல் ஆணையம், மாநகராட்சி ஆகியவை கேட்டு கொண்டுள்ளது.

அதன்படி தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த அனைத்து நடவடிக்கைகளுடன் சுகாதாரத்துறை தயாராகவே உள்ளது.

அனைத்து பூத் களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தான் வாக்களிக்க செல்ல வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தனனார்வலர்கள் பணி அமர்த்தப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.

6 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு என்ற செய்தியை நம்பவேண்டாம். .

ஆனால் நோய் பரவல் அதிகரித்து வருவதை மக்கள் புரிந்துகொண்டு, தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், கட்டுப்பாடுகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும். சுகாதாரப் பணியாளர்கள் முழுவீச்சில் செயல்பட்டாலும், தடுப்பூசி செலுத்தி கொள்ள குறைவான அளவிலேயே மக்கள் வருகின்றனர். கேட்டால் தேர்தலை காரணமாக கூறுகின்றனர்.

எனவே 7ம் தேதிக்கு பின் வாய்ப்புள்ள பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

இதுவரை 32 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை.

பள்ளிகளை நாம் மூடி உள்ளோம், ஆனால் பயிற்சி வகுப்புகளை, நடத்தி வருகின்றனர். இது யாரை ஏமாற்றுகின்றனர் என்று தெரியவில்லை.

நேற்றோடு பிரச்சாரம் முடிந்துவிட்டது. எனவே கொரோனா பரவாது என்று அஜாக்கிரத்தையாக இருக்க கூடாது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறினார்.

மற்ற மாவட்டங்களில் குறைவாக உள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.