சபரீசன் அண்மையில் நாக்பூர், மும்பை, டெல்லி, பெங்களூர் மேற்கொண்ட பயண பின்னணியை விசாரிக்க வருமான வரித்துறை முடிவு…
இயக்குனராக உள்ள நிறுவனங்களின் வரவு செலவு விவரங்களையும் துருவுகிறது வருமான வரித்துறை…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான நீலாங்கரை பங்களாவில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். இதேபோல், கரூர் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, திருவண்ணாமலை திமுக எம்.பி. அண்ணாதுரை உள்பட 28 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இரபு 10 மணியளவில் முடிவடைந்தது.
வருமான வரித்துறையினரின் இந்த சோதனை திமுக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சபரீசன் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து வருமான வரித்துறையில் இருந்து சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது, அண்மையில், அவர் பயணம் மேற்கொண்ட வடமாநிலங்களின் விவரங்களை சேகரித்தனர். நாக்பூர், மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்குச் சென்றது எதற்காக? அங்கெல்லாம் யாரை சந்தித்தீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன, வணிக ரீதியிலான சந்திப்பா, அல்லது தனிப்பட்ட சந்திப்பா என்பது குறித்து சபரீசனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வருமான வரித்துறை முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சபரீசனின் உறவினர் பிரவீன் கணேஷ் என்பவர் இயக்குனராக உள்ள 12 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை, அதன் வரவு செலவு உள்ளிட்ட ஆவணங்களையும், அந்த நிறுவனங்களோடு சபரீசனுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தி வருமான வரித்துரை திட்டமிட்டுள்ளதாகவும், 12 நிறுவனங்களின் பட்டியல் குறித்த விவரங்களையும் வருமான வரித்துறை வெளியிடடுள்ளது. அதன் விவரம் வருமாறு:
1) ரெக்ஸ் எனர்ஜி ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், (2) டிராவல் விஸார்ட் பிரைவேட் லிமிடெட், (3) எக்ஸ்ட்ரான் கிரீன் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், (4) ஸ்ட்ராட்கோன் கிரீன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், (5) ஹசியா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், ( 6) லெட்ஸ் கனெக்ட் அலையட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், (7) ஸ்ட்ராட்கோன் ஜெனரல் நைஸ் மினரல் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் (8) ட்ரிஷ் கிரீன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (9) ப்ரோமேஸ் எனர்ஜி ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (10), ஸ்ட்ராட்கோன் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், (11) செயல்படுத்துதல் ஜீனியஸ் கற்றல் தீர்வுகள் பிரைவேட் லிமிடெட் (12), லெட்ஸ்கனெக்ட் AI லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்.மேலே உள்ள அனைத்து நிறுவனங்களிலும், சபாரீசனின் உறவினர் பிரவீன் கணேஷ் இயக்குநராக உள்ளார். மேலும் இவை தவிர, சபாரீசனே நேரடியாக 2 நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார். (1) வொய்செடெக் பிசினஸ் சிஸ்டம் இந்தியா பிரைவேட் லிமிடெட் (2) மெர்ச்சன்டைஸ் எல்.எல்.பி. ஆகிய அந்த 2 நிறுவனங்களில் கடந்த ஓராண்டாக நடைபெற்ற பணபரிவர்த்தனைகளையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா, சட்டத்திற்குப் புறம்பாக பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் சபரீசனுக்கு நோட்டீஸ் அனுப்பி வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என வருமான வரித்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
ரூ. 1.31 லட்சம் மட்டுமே இருந்தது ; ஆர்.எஸ்.பாரதி தகவல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை-சபரீசன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை முடிந்தவுடன் திமுக சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், வருமான வரித்துறை சோதனையில் யில் ரூ. 1.31 லட்சம் மட்டுமே கிடைத்தது.
அதையும் அதிகாரிகள் தலைவர் குடும்பத்தினரிடம் தந்துவிட்டு போய்விட்டனர்.
சோதனை நடத்திய ஐடி அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.