Fri. Nov 22nd, 2024

மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதன் விவரம் இதோ….

திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் வேலை இழந்தனர் இப்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதால் ரூபாய் 3.00.500 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்,

வரும் காலங்களில் அனைவருக்கும் வேலை என்ற நிலையை உருவாக்குவோம். மீனவர் நலனில் அக்கறை கொண்ட ஒரே அரசு அதிமுக அரசுதான் வரும் காலங்களிலும் மீனவர்களின் தோழனாக என்றும் அம்மாவின் அரசு இருக்கும்.

நமது மாநிலத்தின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தரும் அரசாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு உள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா தொற்றி பரவி மக்களின் வாழ்வாதாரத்தையே சீர்குலைத்தது. இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள மக்களை கொரோனோ தொற்றில் இருந்து விரைவாக பாதுகாப்போம் என்று கூறிய பிரதமர் மோடி, வாக்குறுதி கொடுத்ததைப் போல, தடுப்புபூசி கண்டுபிடிக்கப்பட்டு இன்று செயல்பாட்டு வந்துவிட்டது. உலகமேஇன்றைக்கு இந்தியாவை திரும்பி பார்க்கிறது. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுபவராக நமது பிரதமர் மோடி உள்ளார்.

இந்தியாவிலேயே உள்கட்டமைப்பை வலுவாக இருக்கும் மாநிலங்களிலும் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. சாலை மேம்பாட்டுக்காக மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது.

மத்திய அரசின் உதவிகள் மூலம் தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் எனது தலைமையில் சென்னையில் தொழில் முன்னேற்ற மாநாடு நடைபெற்றது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான தொழில் அதிபர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். ஏறக்குறைய, 3 லட்சத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முதலீடு செய்ய 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. தொடர்ந்து புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்கும் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு வருகிறது. தொழில்துறையில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது என்பதால்தான். வரும் காலங்களில் மேலும் பல்வேறு புதிய தொழில்கள் தமிழகத்தில் துவக்க, தொழில் முனைவோர்கள் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.