நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, கூடலூர், உதகை, குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுகவில் அதிகாரத்தையும் பதவியையும் குடும்பத்தினரை தவிர மற்ற எவருக்கும் விட்டுத்தர மாட்டார்கள். ஆனால், அதிமுக.வில் சாதாரண நிர்வாகி கூட முதல்வராக உயர முடியும் என்பதற்கு நானே ஒரு உதாரண்ம்.
மக்களின் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்டத்தில் ரூபாய். 441 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டித்தரப்படும்/
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தலுக்காக மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவரை தேர்தலுக்குப் பிறகு உங்களால் நேரில் சென்று பார்க்க முடியாது.
நான் உங்களில் ஒருவன். என்னை எப்பொழுதும் சந்தித்து உங்களது குறைகளை கூற முடியும். மக்களை பாதுகாக்கும் ஒரே கட்சி அதிமுக. மக்களுக்கான நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது
வரும் ஆண்டுகளிலும் மக்களில் ஒருவனாக தமிழ் நாட்டை முன்னெடுத்து செல்வேன்
கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பஞ்சாயத்து இல்லை, நில அபகரிப்பு இல்லை, அராஜகம் இல்லை. இவை அனைத்தும் இல்லாமலிருக்க மீண்டும் அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும்
பெண்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு அதிமுக அரசு மட்டும்தான். அதிமுக ஆட்சியில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இல்லத்தரசிகளின் சுமையை குறைப்பதற்காக எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வாஷிங்மெஷின் வழங்கப்படும்
சாமானிய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. வரும் காலங்களிலும் சாமானிய மக்களின் அரசாக அதிமுக அரசு இருக்கும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.