Fri. Nov 22nd, 2024

சென்னையில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

சாமானிய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. வரும் காலங்களிலும் சாமானிய மக்களின் அரசாக அதிமுக அரசு இருக்கும்.

மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைந்தவுடன் வீடில்லா மக்கள் அனைவருக்கும் சொந்தமாக நிலம் வாங்கி அடுக்கு மாடி வீடுகள் கட்டித் தரப்படும்.

தமிழகம் முழுவதும் 14 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன. வரும் காலங்களில் தமிழகத்தில் அனைவருக்கும் வீடு என்ற நிலையை உருவாக்குவோம்.

ஆண்டாண்டு காலமாக பெண்கள் இழிவுபடுத்துவதே திமுகவின் வாடிக்கை.

திமுக ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் ஆகியவற்றால் மக்கள் மிகவும் துன்பத்துக்கு ஆளானார்கள்.

அதிமுக ஆட்சியில் அவை அனைத்தையும் முற்றிலும் ஒழித்தோம்.

எங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றங்கள் குறைந்து சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது

அதிமுக ஆட்சியில் 16,000 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

வரும் காலங்களிலும் விவசாயிகளின் தோழனாக என்றும் எனது தலைமையிலான அரசு இருக்கும்.

பணிக்கு செல்லும் பெண்களுக்கு வாகனம் தேவைப்படும் என்பதற்காக அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூபாய் 25000 மானியம் வழங்கியுள்ளோம்.

இதன் மூலம் 95 சதவீத பெண்கள் பயன்பெற்றுள்ளனர். பெண்களின் நலன் பற்றி சிந்திக்கும் ஒரே அரசு அதிமுக அரசு மட்டுமே.